
தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழா !
05:09:2026: தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர், 'செக்கிழுத்த செம்மல்', 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை முன்னிட்டு, அய்யலு தெருவில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு, வ.உ.சி.யின் பேத்தி மரகத மீனாட்சி ராஜா தலைமையில் மாலை அணிவித்துச் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சைவ நெறி காந்தி, சிவஞான பிரகாச சபை தலைவர் ஜானகிராமன், திருநாவுக்கரசு மடாலயத் துணைச் செயலாளர் சங்கர பாகம், சைவ சமுதாய சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் சொக்கலிங்கம், உப தலைவர் சந்திரன், சுந்தர், முனியப்பன், ரவி, சிவராமகிருஷ்ணன், ஓய்வுபெற்ற சார்-பதிவாளர் சுப்பிரமணியன், மீனாட்சி கண்ணன், இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் வேதநாயகம், வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வ.உ.சி. நற்பணி மன்ற நிர்வாகிகள் முருகேசன், சொக்கலிங்கம், முத்துக்குமாரசாமி, மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா. பிரமநாயகம், வே. லட்சுமணன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
Comments
No comments yet. Be the first to comment!
